Welcome to Real Choice




 இன்றைய புது நாளில் வணக்கத்துடன் புதிய தகவலுடன் ரியல் சாய்ஸ் ,  ரியல் எஸ்டேட் முதலீடு என்பது பல வகை உண்டு, உதாரணமாக அங்கீகாரம் பெற்ற வீட்டு மனைகளில் முதலீடு ஒரு வகை ,அதை சில காலம் பொறுத்து விற்பனை செய்யும்போது ஒருவித வருமானம் பெருக்கம் , கட்டிய வீட்டை வாங்கி விற்பதற்கு ஒருவித லாபம் , ஆனால் நல்ல விளை நிலங்களில் ,நல்ல விளை நிலங்கள் என்பது நல்ல மண் வளம் , நீர் ஆதாரம் , சீதோஷ்ண அமைவிடம் மிக முக்கியம்.




தமிழகத்தில் காஞ்சீபுரம் , செங்கல்பட்டு, தஞ்சாவூர் , அம்பாசமுத்திரம்,காவிரி டெல்டா  மற்றும் பொள்ளாச்சி பகுதியில் மட்டுமே நல்ல வேளாண்மை செய்யப்படுகின்ற இடங்கள் ஆகும்,


வேளாண்மை என்பது நம் நாட்டின் முதுகெலும்பு , விவசாயம் இல்லை என்றால் நம் நாடு உணவு பஞ்சம் என்ற பாதாளத்தில் விழுந்து போகும், வேளாண்மை செய்வதால் வருமானம் இல்லை என்பது, தவறான கண்ணோட்டம் உண்டு, 


இன்று நாம் உண்ணும் உணவு அனைத்தும் ஆரோக்கியமானது என்று உறுதியாக எவராலும் சொல்ல இயலுமா ?




காரணம் அமோக விளைச்சல் , லாபம் என்ற நோக்கில் விவசாயிகள் அதிகமான இரசாயன உரங்கள் என்ற விதத்தில் உண்ணும் உணவில் விஷத்தை சேர்த்து உண்பதா ? நம்முடைய சந்ததியினருக்கு நாம் வைத்து போவது இதானா  ?


பெரிய தொழிற்சாலை , நிர்வகிக்கும் உரிமையாளர்கள் நிறுவனங்கள் நடத்தும் உரிமையாளர்கள் , அனைவருக்கும் பணம் இருக்கும் , ஆனால் உடலுக்கும் , உள்ளத்துக்கும், மூலைக்கும் ஒய்வு நிச்சயம் தேவை , இவர்களில் பலர் மன அமைதிக்காக பண்ணை தோட்டங்கள் வாங்கி ஓய்வு நேரங்களில் பசுமையான செடிகள், கொடிகளை காணும் போது ஒரு விதமான மன அமைதி பெறுகின்றனர்,


இடத்தை வாங்கினால் மட்டும் போதாது நல்ல தோட்டம் அமைக்க வேண்டும், காய்கறிகள் ,பழ மரங்கள் , மூலிகை செடிகள் ,தானியங்கள் ஆகியவற்றை இயற்கை முறையில் பயன்படுத்தி ,நல்ல மகசூல் பெற ஏற்பாடுகள் செய்யவேண்டும், இதனால் நிலத்தின் மதிப்பீடு உயரும், இவ்வகை வேளாண்மை  லாபம் என்ற நோக்கம் தவிர்த்து நல்ல வேளாண் பொருட்களை நாமும் உண்டு, நம் சமுதாயத்திற்கு நம் பங்கை செயல்படுத்தும் போது நமக்கும் நன்மை ,நமது நாட்டின் உற்பத்தி வளர்ச்சிக்கும் நன்மைகள் ஏற்படும்,


வசதி உள்ளவர்கள் 25 ஏக்கர் முதல் 50 ஏக்கர் வரை நல்ல இடத்தில் வாங்கலாம்,அது மட்டும் இல்லாமல் வருமான வரி செலுத்துபவர்கள் , விவசாயம் மூலம் தங்கள் வரி செலுத்துவதில் சிறிது விலக்கு பெறமுடியும்,

நடுத்தர குடும்பத்தினர் தங்களுக்கு கிடைக்கும் சேமிப்பு பணத்தை கூட 3 ஏக்கர் முதல் 5 ஏக்கர் வரை தங்கள் முதலீட்டில் நிலம் வாங்கி வேளாண்மை செய்யலாம்.


ஏன் இப்படி ஒரு கட்டுரை என்றால் எனக்கு நம் நாட்டின் மீது அக்கறை மேலும் வேளாண்மை செய்வதை நான் மிகவும் நேசிக்கிறேன், இடத்தை வாங்குகிறவர்களுக்கு நான்  அந்த இடத்தை பாதுகாக்கவும் இயற்கை முறையில், ,உணவு பொருட்கள் உற்பத்தி செய்யவும் விருப்பம் கொண்டுள்ளேன்,அதற்கு உண்டான நிர்வாகம் தொகையை தங்களிடம் பெற்றுக்கொண்டு,இதில் எனக்கும் உபயோகம் உண்டு

 நாட்டின் உணவு உற்பத்தியில் உங்கள் பங்களிப்பு வேண்டும் இரட்டிப்பு லாபம் பெறுங்கள்






0 Comments