Welcome to real choice estates

 



வணக்கம் நண்பர்களே இன்று உங்களுடன் ஒரு முதலீடு சம்பந்தமான இடம் குறித்து விவரிக்கிறேன் , இன்று வண்டலூர் அருகில் இடம் வாங்க போனால் 3000/- ரூபாய் ஒரு சதுர அடி, அதற்கு அடுத்து

வரதராஜபுரத்தில் ( மண்ணிவாக்கம் ) வாங்க சென்றால் ,அங்கு 2500/- ரூபாய் குறைவு இல்லை , அடுத்து படப்பையில் சென்றால் அங்கு 2000/- ரூபாய் ஒரு சதுர அடி விலை , அடுத்து ஒரகடம் சிப்காட்  அருகில் வீட்டுமனை 1800/- ரூபாய் ,சதுர அடி விலை , இதற்கு அடுத்து உள்ள இடங்கள் விவசாயம் நிலங்கள் ,அதற்கும் அடுத்து உள்ள இடங்கள் ஊத்துக்காடு என்கிற இடம் இங்கு பலர் முதலீடு செய்துள்ளனர், இங்கு சதுரடி விலை 1200 முதல் 1500/- வரை விலை போகிறது ,அதற்கும் அடுத்து இருக்கும் இடம் வாலாஜாபாத் , இங்கு வசிப்பிடம்  அமைக்க ஏற்ற இடமாக , கருதப்படுகிறது , தொழிற்சாலைகள் அருகில் இல்லாத இடம் மற்றும் நல்ல பாலாற்று குடிநீர் , சென்னைக்கு உடனுக்குடன் மின்சார ரயில் , சென்னை நகர பேருந்து, மற்றும் காஞ்சிபுரம் , வேலூர்,பெங்களூருக்கு, செங்கல்பட்டு போன்ற இடங்களுக்கு பேருந்து வசதி ,


வாலாஜாபாத் பேரூராட்சியில் பள்ளிகள் , அருகில் 2 பொறியியல் கல்லூரிகள் ,பல்நோக்கு மருத்துவமனை ,அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ,1 காய்கரி மளிகை மார்கெட் ,வட்டார வளர்ச்சி அலுவலகம் , வட்டாட்சியர் அலுவலகம், காவல் நிலையம் ,3 தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள்,. 2 தனியார் வங்கிகள் ,9  வங்கிகள் ATM சென்டர், ஆகிய வசதிகள் நிறைந்த வசிப்பிடம் , வாலாஜாபாத் நகரத்திற்குட்பட்ட பகுதியில் பேருந்து நிலையம் அருகில் 3000₹ முதல் 5000₹ வரை 1 சதுர டி விலை விற்பனை செய்யப்படுகிறது.


இதற்கடுத்து  வாலாஜாபாத்திலிருந்து 2 .1/2 கிமீ தூரத்தில் உள்ளது  300 வீட்டுமனைகள் அமைக்க பெற்ற மிதிலை நகர் DTCP APPROVED இவ்விடத்தில் கிராம சாலை அருகில் உள்ள இடங்கள் 400₹ முதல் 500₹ வரை விலை போகிறது , அவ்விடத்தில் என்னிடம் 3 வீட்டுமனைகள் உள்ளது.விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும் ,முதலீட்டுக்கு ஏற்றது, மனை நிறுவும் போது  1 சதுரடி விலை  ( 2008ல் )  100₹.

0 Comments