வணக்கம் நண்பர்களே ஒவ்வொரு மனிதனுக்கும் பொன், பொருள் ,ஆஸ்தி இதை எவராலும், எப்பொழுது வேண்டுமானாலும் பெற்றுக்கொள்ள முடியும், எவரையேனும் நீங்கள் ஒரு கேள்வி கேளுங்கள் உங்களுக்கு உடல் முக்கியமா அல்லது உயிர் முக்கியமா ? என்று , சிலர் சற்று யோசிப்பர் , சிலர் தாமதிக்காமல் இரண்டும் தான் என்பர் ,
நாம் நம்முடைய வாழ்வாதாரம்(பொருளாதாரம் ) சிறப்படைய முக்கியத்துவம் கொடுக்கிறோம் , தன் பெற்றோருக்கு உடல் நலம் சார்ந்தது சிலருக்கு அக்கறை , சிலருக்கு தன் துணைவியார் உடல் நலம் மீது அக்கறை, சிலருக்கு தன் பிள்ளைகள் நலன் சார்ந்த அக்கறை இப்படி தன்னை சுற்றியுள்ளவர்களுக்கே அவர்களின் உடல் நலம் குறித்து அக்கறை செலுத்துவார்கள் ஆனால் இவர்கள் தங்களை பற்றி கவலைப்பட மாட்டார்கள் ...
நாம் பிறந்தது எதற்காக ? எவருக்கேனும் தெரியுமா நாம் உறுதியாக இத்தனைக்காலம் உயிர் வாழபோகிறோம் என்று !! கூட தெரியாது ,உலகம் மாயை என்று ஞானிகளும், சித்தர்களும் ஏட்டில் சொல்லி வைத்தும் ஏற்றுக்கொண்டோர் எவர் ?
ஆதிகாலத்தில் மனிதன் எதை செய்தாலும் தன் உடல் உழைப்பு இல்லாமல் வாழ்ந்ததில்லை, நல்ல இயற்கை சூழல் நிறைந்த இடங்களில் வாழ்விடம் அமைத்து, இரசாயனம் கலப்பில்லாத காய்கறிகள், பழங்கள் , இயற்கை உணவு முறையுடன்,ஆரோக்கியத்துடன் வாழ்ந்தனர், இதனால் அன்றைய மனித இனத்தின் ஆயுள் சராசரி வயது 125க்கு மேல் , பயணம் என்று சொன்னால் கூட நீண்ட தூரத்திற்கு மட்டுமே கால்நடைகள் உபயோகபடுத்தபட்டது.
இதனால் நல்ல ஆரோக்கியமான வாழ்க்கை முறை அவர்கள் அனுபவித்தனர், மேலும் அக்காலத்தில் சீதலம் மற்றும் காய்ச்சல், விஷக்கடிக்கு மட்டுமே மருத்துவர்கள் அவசியப்பட்டது , தற்போது இருக்கும் நீரிழிவு, புற்றுநோய், இரத்த அழுத்தம், நரம்பியல் பிரச்சினைகள் போன்றவைகள், அந்நாளில் அபூர்வமானது ,மேலும் தற்போது நம்முடைய வாழ்க்கை முறையை சற்று யோசித்து பாருங்கள்,
மிக்சி , கிரைண்டர் , வாஷிங் மெஷின் , மோட்டார் சைக்கிள் , கார், வீட்டை பெருக்கி சுத்தம் செய்ய இயந்திரம், அலைபேசி, போன்ற ஆபத்தை விளைவிக்கும் கதிரியக்க அலைகள் இல்லாமல் மனித வாழ்வு ஒரு நாள் கடந்து போகமுடியவில்லை,
நம்மிடையே மன ஒற்றுமை , சந்தோஷம் ,மன அமைதி இருக்கிறதா? என்று சிந்தியுங்கள், போட்டி, பொறாமை, பெருமை , அகங்காரம், ஆணவம், ஏற்றத்தாழ்வு , இல்லாமல் எந்த மனிதன் , எந்த ஊரில் வாழ்கிறார்கள் .?
அன்பு ,பாசம்,பரிவு, இரக்கம் , கனிவு இவை ஏட்டில் படிக்கலாம், ஆனால் கண் முன்னே காண்பது அரிது எத்தனை கடவுள் மற்றும் மதங்கள் , இந்த காரியங்களை குறித்து எத்தனை நீதிநெறி நூல்களில் எழுதப்படட்டுள்ளது அனைத்தும் ஏட்டுசுரக்காய் மட்டுமே !!
விஞ்ஞான முன்னேற்றம் அவசியம் தான் இதில் எந்த மாற்றுக்கருத்து இல்லை , ஆனால் நீங்கள் உங்கள் வழி தோன்றலுக்கு செய்யும் நன்மைகள் என்ன ? சமூகத்திற்கு என்ன செய்யபோகிறீர்கள் ?
இயற்கை சூழலுக்கு , இயற்கை உணவுக்கு, இயற்கை வாழ்வியலுக்கு வழி வகை செய்யுங்கள், அவரவர் பங்கு என்ன ? எல்லோரும் எனக்கென்ன என்று சொன்னால் எப்படி,?நான் ஒருவன் நடைமுறை படுத்தினால் எல்லாம் மாறிடுமா என்று கேட்காதீர்கள், உங்களைப் பார்த்து உங்கள் பிள்ளைகள் பின்பற்றுவர்,பிறகு உங்கள் ஊர்,பிறகு உங்கள் தேசம், பிறகு இந்த உலகம் .. இயற்கைக்கு இடம் கொடுங்கள், வேதிப்பொருட்கள் கலவாத இயற்கை உணவுக்கு முதலிடம் கொடுங்கள்,
பாக்கெட் பால் எத்தனை நாட்களுக்கு, மெல்லிய அரிசி தான் சாப்பிட வேண்டுமா? சுவை கூட கூட நஞ்சு அதிகரிக்கும், விதையுள்ள காய் மற்றும் கனிகளை உட்கொள்ளுங்கள், நாட்டு காய்கறிகள், பழங்கள் உட்கொள்ளுங்கள்,நாட்டு பசும்பால் அருந்தவும், மாமிசம் புசிப்போர் நாட்டு கோழி மற்றும் முட்டைகள் உட்கொள்ளுங்கள்,அடுமனை தின்பண்டங்கள் தவிருங்கள்,கடலை மிட்டாய்,பொரி உருண்டை ,அதிரசம் ,முருக்கு,பட்சனங்களை வீட்டில் தயாரிக்கப்பட்ட உணவுகள் நன்மை பயக்கும், தூய்மையான கடலை எண்ணெய், மற்றும் நல்லெண்ணெய் பயன்பாடுகள் நல்லது,
மாறுவோம், மாற்றுவோம் இந்த உலகை இயற்கை வாழ்வியல் முறைக்கு, நல்ல சுவாச காற்று,நல்ல உடல் உழைப்பு நல்ல இயற்கை உணவு, அவசியம்... பசுமை புரட்சியை உருவாக்க அவரவர் பங்கு அவசியம் என்பதை உணருவோம்,உயர்த்துவோம்
வாழ்க வளமுடன்.
வாழ்க வையகம்
அன்புடன்
ரியல் சாய்ஸ்.
0 Comments