அன்புக்கு இனிய வாடிக்கையாளர்களே , வணக்கம், முதலில் உங்கள் அனைவருக்கும் ரியல் சாய்ஸ் சார்பாக இனிய தித்திக்கும் தீபாவளி வாழ்த்துக்கள், இந்த இன்பமயமான நேரத்தில் , மகிழ்ச்சியான தருணத்தில் , சில வார்த்தைகள் உங்களிடம் அன்புடன் நீங்கள் ஒரு சில காரியங்களை நினைத்து சிந்தனை செய்யவேண்டும், உலகில் எல்லோருக்கும் தேவை ஒன்றே அது சந்தோஷம், மகிழ்ச்சி , என்கிற ஒரே அர்த்தம் கொண்ட இரு வார்த்தை , இது எப்படி கிடைக்கும் ? பணம் இருந்தால் இவை தானாகவே கிடைத்துவிடும் என்பர் பலர் , எல்லோரும் இன்று அதற்காக ஓய்வின்றி ஓடிக்கொண்டு இருக்கின்றனர் , வேர்வை சிந்தி உழைப்பது எதற்காக ?
ஏழை பாமரனும் உணவுக்கு தான் பாடுபடுகிறான் , அவனுக்கு சேமிப்பு பற்றி அக்கறை இல்லை என்றாலும் அவருடைய பிள்ளைகளுக்கு ஒரு பவுன் நகையாகிலும் அவனுடைய மகளுக்கு சேர்க்கவேண்டிய கட்டாயம் உண்டு,
நடுத்தர வர்க்கம் பாமரனை போலும் வாழமுடியாது பணம் கொண்ட செல்வந்தரை போலும் ஆக முடியவில்லையே என்ற ஒரு ஏக்கம் எப்போதும் இருக்கும் ,அவர்களுக்கும் தங்கள் மகன் ,மகள் ஆகியோரை நல்ல கல்வி, வேலை ஏற்படுத்தி அவர்களின் எதிர்காலம் சிறப்பாக அமைய சேமிப்பு என்ற பாதுகாப்பு ஏற்படுத்த முயற்சி செய்வார்கள் ,
மேலும் பரம்பரை செல்வந்தர்கள் தன் முன்னோர்கள் சேமித்து , பாதுகாத்த சொத்துக்களை இரட்டிப்பு அடைய முயற்ச்சிகள் பார்கள் , அது அவர்களுக்கு எளிது என்று !!,மற்ற இருவருக்கும் உள்ள தோன்றும் என்னம் ஆனால் ,உண்மையில் ஒரு சிலர் மட்டுமே அப்படி செயல்படமுடிகிறது பலர் ஆடம்பரமான வாழ்கையை விரும்பி இருந்ததையும் இழந்தவர்களுக்கு கானத்தான் செய்கிறோம்,
ஆக எல்லோரும் பணம் ,சொத்து ,பொன்நகை , வங்கியில் சேமிப்பு என்ற அவரவர் , விரும்பும் நிலையில் முதலீடு செய்கின்றனர் , ஆக யாராக இருந்தாலும் அவர்கள் சேமிப்பு என்பது இருந்தால் மட்டுமே , உங்கள் பணம் உங்களிடமே பாதுகாப்பாக இருக்கும், நீங்கள் விரும்பும் போது உங்கள் தேவைகளையும், கடன் என்கிற கொடிய அதள பாதாளத்தில் சிக்கிகொள்ளாமல் உள்ளதை வைத்து சிறப்புடன் , சந்தோஷமாக வாழுவதற்கு , நல்ல திட்டமிடல் கொண்ட முதலீடு அவசியம் ,
இன்று வங்கிகள் தங்கள் முதலீட்டுக்கான வட்டி குறைப்பு செய்யபடுகிறது, தங்க ஆபரணங்கள் நல்ல முதலீடு தான் ஆனால் பாதுகாக்க முடிவதில்லை, ஷேர் எப்போது ஏறும் , இறங்கும் என்பது தெரியாது ,, ஆகையால் நிலத்தில் , வீட்டு மனைகள் , கட்டிடங்கள் போன்றவற்றில் நல்ல இடத்தில் ,அடுத்து வரும் காலங்களில் மதிப்பு உயர கூடிய இடங்களை தேர்ந்தெடுத்து , சொத்துக்களில் பிரச்சினை இல்லாமல் நல்ல இடங்களை தேர்ந்தெடுத்து முதலீடு செய்யுங்கள் ,அதை தவிர்த்து மிக மலிவாக கிடைக்கிறதே என்று எந்த காலத்திலும் மதிப்பீடு உயராத , நீர் நிலைகளில் அருகில் ,விளை நிலங்களில் மனை பிரிவு ஏற்படுத்தி மயக்கும் விளம்பரம் மற்றும் இலவசம் பொருட்கள் தந்து ஏமாற்றும் சில நிறுவனங்களில் பலர் சிக்கி தவிக்கின்றனர் , ஆகையால் கடந்த 20பது வருடங்களாக ரியல் எஸ்டேட் தொழிலில் நீண்ட அனுபவம் கொண்ட என்னிடம் ஆலோசனை கேட்டு , வாங்கும் இடத்தில் , அருகில், எப்படி உள்ளது,எதிர்காலத்தில் எப்படி அமையும் என்பதை ஆராய்ந்து நியமான கமிஷன் பெற்று உங்களுக்கு உதவ வாய்ப்பு தாருங்கள், என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
0 Comments